இலக்கியம்

நான் என்னென்ன வாங்கினேன்? - சிவகாமி ஐ.ஏ.எஸ்

செய்திப்பிரிவு

புத்தகக் காட்சியில் எழுத்தாளர் சிவகாமியைப் பார்த்த பிறகு அவர் என்ன புத்தகங்கள் வாங்கியிருக்கிறார் என்று சோதனையிடாமல் இருக்க முடியுமா? புத்தகங்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்காமல் இருக்க முடியுமா?

“வாசிப்புங்கறது சின்ன வயசில ஆரம்பிச்சாதான் அது நிறைய கட்டங்களைத் தாண்டி மேலான நிலைக்கு வரும். என்னோட வாசிப்பும் சின்ன வயசில ஆரம்பிச்சதுதான். மளிகைக் கடைல பொட்டலம் மடிச்சுக்கொடுக்குற காகிதத்துல ஆரம்பிச்சு எதையும் விட்டதில்லை. ஏதாவது காகிதம் என் பார்வையில் பட்டுடிச்சுன்னா அதுல ஏதாவது அச்சாகியிருந்துச்சுன்னா அதுவும்கூட எனக்குப் புத்தகம்தான். அப்படி ஆரம்பிச்சு ஒரு கட்டத்தில, அந்த வயசிலேயே ஒரு நாளைக்கு 500 பக்கம்ங்கற அளவுக்குப் படிப்பேன்.

ஐ.ஏ.எஸ். படிச்சபோதும், அதுக்குப் பிறகும் பக்கங்களோட எண்ணிக்க ரொம்பக் கொறஞ்சிடுச்சு. 500 பக்கம்ங்கற கணக்கு, ஒரு நாளைக்கு 25-50 பக்கங்கள்ன்னு ஆச்சு. ஆனா, முன்னவிட இப்பத்தான் ஆழமாப் படிக்கிறேன். வேகமா ஓடறப்ப எதயும் சிந்திக்க முடியாதுன்னு மிலன் குந்தெரா சொல்வார். அதே மாதிரி வேகமா படிச்சிக்கிட்டுப் போகும்போது சிந்தனை எதுவும் வராது. நிதானமான வாசிப்புதான் சிந்தனை, கற்பனை எல்லாத்தையும் தூண்டும்.

இந்தப் புத்தகக் காட்சியில நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா கேப்டன் எஸ். கலியபெருமாளின் ‘தலித் சுதந்திரப் போராட்டம்’, கிஷோர் சாந்தாபாய் காலேயின் ‘குலாத்தி’, ஸர்மிளா செய்யித்தின் ‘உம்மத்’, புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘மீசான் கற்கள்’, லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’.”

SCROLL FOR NEXT