கீதையை இளைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது. கீதை வாங்கப்படும் அளவுக்கு வாசிக்கப்படுவதில்லை. மிரட்டும் நடையிலான உரை ஒரு காரணமாக இருக்கலாம். இது, எளிய அழகிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், தைவான் தமிழ்ச் சங்கத் தலைவரும் உலகக் கவிஞர்கள் பேரவைத் தலைவருமான டாக்டர் யு சியும் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். யுத்த களத்தில் எதிரே நிற்கும் கௌரவர்களின் உறவை மனதில் கொண்டு தயங்கும் பார்த்தனுக்கு, அவனது சாரதியான கிருஷ்ணர் அச்சத்தையும் தயக்கத்தையும் போக்க கீதையை உபதேசிக்கிறார். ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் ஆகிய மூன்று வழிகளில் இறைவனை அடையும் மார்க்கம் எளிதாக விளக்கப்படுகிறது.
சக்ஸஸ் மந்த்ரா இன் பகவத் கீதா
எம்.ராஜாராம்
நோபெல் பப்ளிஷர்ஸ்
புதுடெல்லி
011 4565 5542
விலை: ரூ.125