கவிஞர் பெருந்தேவி தன் முன்னெடுப்பில் 2014-ல் நடத்திய ‘அசோகமித்திரனை வாசித்தல்’ நிகழ்வை அடுத்து, தற்போது பூமணிக்கு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்.
எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் முழு நாள் நிகழ்வாக இன்று நடைபெறுகிறது. தேவிபாரதி, பெருமாள் முருகன், ராஜன் குறை, அரவிந்தன், பெருந்தேவி, கல்யாணராமன், ஸ்டாலின் ராஜாங்கம், காசி மாரியப்பன், ஸ்ரீகுமார், ஜே.எஸ்.கார்த்திகேயன் என்று தமிழின் முக்கியமான படைப்பாளிகளும் விமர்சகர்களும் கலந்துகொண்டு பூமணியின் எழுத்துலகத்தின் ஆழ அகலங்களைப் பேசவிருக்கிறார்கள். பூமணியும் கலந்துகொள்கிறார். வாசகர்களே, வாருங்கள்... பூமணியை வாசிப்போம்!