இலக்கியம்

புதையலைத் தேடிச்செல்லும் சிறுவனின் பயணம்

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற அன்றாடங்களை சாகசங்கள் நிரம்பியதாக மாற்றும் ‘ரசவாதி’யின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு நேர்மறையான எண்ணங்களை விதைக்கிறது!

- கதிரவன்

SCROLL FOR NEXT