“ஐ.. இயல்வாகை..” என உவகையோடு ‘இயல்வாகை’ அரங்குக்குத் துள்ளிக்குதித்து ஓடிவருகிறார்கள் வாசகர்கள். மறைந்த நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெற்கதிர்களால் அரங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புத்தகங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்தல் தொடர்பான புத்தகங்களும் இங்கே கிடைக்கும். பனையோலை, வாடாமல்லி, தூக்கணாங்குருவிக் கூடு, விழுது, வேர், இலை எனக் குழந்தைகளுக்கு அப்பா, அம்மாக்கள் விளக்கிக்கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.