இலக்கியம்

‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2018

செய்திப்பிரிவு

மும்பையைச் சேர்ந்த ‘ஸ்பாரோ’ இலக்கிய அமைப்பு இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. புனைவு, கவிதை என சிறப்பாகப் பங்களித்து தனக்கெனத் தனித்த இடங்களைப் பிடித்திருக்கும் தேன்மொழி, பா.வெங்கடேசன், எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தமிழுக்காகவும் குஜராத்தி எழுத்தாளர் வர்ஷா அடால்ஜா, மராட்டி எழுத்தாளர் அருணா டேரே ஆகியோர் பிற மொழிக்காகவும் 2018-க்கான ஸ்பாரோ இலக்கிய விருதுகள் பெறுகிறார்கள். மும்பையிலுள்ள எஸ்என்டிடி பெண்கள் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 8 அன்று விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் அம்பை, கவிஞர் சுகுமாரன், பதிப்பாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதுக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT