கூத்துப்பட்டறை, லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை, மூன்றாம் அரங்கு ஆகியவை இணைந்து மறைந்த ந.முத்துசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
நவம்பர் 24, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், அருட்தந்தை ஜெயபதி பிரான்சிஸ், வெ.ஸ்ரீராம், வீ.அரசு, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், செ.ரவீந்திரன், வெளி ரங்கராஜன், பிரசன்னா ராமசாமி, நாசர், ஞானராஜசேகரன் என்று முக்கியமான ஆளுமைகள் கலந்துகொள்கின்றனர். கூத்துப்பட்டறை மூலம் உருவான விஜய் சேதுபதி, பசுபதி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.