இலக்கியம்

தேன் மிட்டாய் | நம் வெளியீடு

செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிறந்த பண்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, கற்பனையில் விவரித்து, வசீகரமான நடையில் எழுதும் மருதனின் எழுத்துகளுக்கு இளம் மாணவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசகர்களாகி விடுகிறார்கள்.

அந்த வகையில், ‘தேன்மிட்டாய்’ என்கிற தலைப்பில் இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’ சிறப்புப் பக்கத்தில் இடம்பெற்ற 25 கட்டுரைகள், இப்போது இரண்டாவது நூலாக உருவாகியிருக்கிறது. அகிரா குரோசாவா, ஜென்னி மார்க்ஸ், ஆட்ரி ஹெப்பர்ன், ஹாருகி முரகாமி, எம்.டி. வாசுதேவன் நாயர், கிளியோபாட்ரா, பாப்லோ பிக்காசோ, பெர்ட்ரண்ட் ரஸல், வெரியர் எல்வின், மேரி கியூரி, ஏ.கே.ராமானுஜன், பிரான்சிஸ் பேகன் போன்ற இந்நூலில் பேசப்படும் பலரும் வாசகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுப்பார்கள். ‘அறிவை மிஞ்சிய ஆயுதம் இல்லை. அதன் ஓர் அங்கமே இந்நூல்’ என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கையில் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

ஏன் வேண்டும் வரலாறு?
மருதன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

திண்ணை | சுதந்திர தின சிறப்புக் கருத்தரங்கம்: தஞ்சை நல்லூர் முற்றம் சார்பில் 'நாமிருக்கும் நாடு நமது என்பதறிவோம்' என்ற தலைப்பில் சுதந்திர தின சிறப்புக் கருத்தரங்கம் இன்று (23-08-2025, சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தஞ்சாவூரில் உள்ள பெசன்ட் அரங்கில் நடைபெற உள்ளது. பேராசிரியர் கி.அரங்கன் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலச்சந்திரன், மருத்துவர் ச.அகமது மர்சூக், பேராசிரியர் இரா.காமராசு, மூத்த பத்திரிகையாளர் கோ.சீனிவாசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

கே.எஸ். விருது வழங்கும் விழா: விஜயா வாசகர் வட்டம் சார்பில் 'கே.எஸ்.சுப்பிரமணியன் நினைவு மொழிபெயர்ப்பு விருதுகள்' வழங்கும் விழா கோயம்புத்தூரில் நாளை (24-08-2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. ஓசூர் சாலை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா அரங்கில் காலை 10 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பேராசிரியர் மா.கார்த்திகைப் பாண்டியன், கேரளத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் டி.எம்.ரகுராம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கேரளா அரசின் வருவாய்த் துறை செயலர் எம்.ஜி.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், கவிஞர் ரவிசுப்பிரமணியன், தொழிலதிபர் பி.எல்.சுப்பிரமணியன், எழுத்தாளர், எம்.கோபாலகிருஷ்ணன், முனைவர் கந்தசுப்ரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

‘நாஞ்சில் நாடன் விருது 2025’ - சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நாஞ்சில்நாடனின் 50 ஆண்டு கால எழுத்துலகப் பணிகளைப் பாராட்டும் 'நாஞ்சில் 50' விழாவும், 'நாஞ்சில்நாடன் விருது 2025' வழங்கும் விழாவும் நாளை (24-8-2025, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கோயம்புத்தூர், ஆருத்ரா அரங்கில் நடைபெறுகிறது. எழுத்தாளர் வே.முத்துக்குமார், விருது பெறுகிறார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டாக்டர் ராதா ரமணி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

SCROLL FOR NEXT