இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.
விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இந்தப் புத்தகம் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். விண்வெளிப் பயணங்கள் பற்றிய செய்திகளை வாசகர்கள் மனதில் காட்சி வடிவங்களாக மாற்றிக் காட்டும் வகையில் மிகவும் சிறப்பாகவும், மிக எளிய நடையிலும், கேள்வி – பதில் வடிவில் உரையாடலாகவும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
விண்வெளி வீர மங்கை சுனிதா வில்லியம்ஸ்
முனைவர்
பெ. சசிக்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.100
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
சீர் வாசக வட்டத்தின் புதிய திட்டம் | திண்ணை: சீர் வாசகர் வட்டம் புத்தகத் தூதுவர்களை நியமிக்கும் புதிய திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் மாணவர்கள் வீடுகளில் நூலகங்களை அமைக்கப்படவுள்ளன. மாதம் ரூ.10 வீதம் ஆண்டுக்கு பத்து நூல்கள், மாணவர்களிடம் வாசிப்பை வளர்த்தெடுக்கும் விதமாகப் பள்ளிகளைத் தத்தெடுத்தல் ஆகிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. சீர் வாசகர் வட்டத்தில் தூதுவராக இணைய 9566331195 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
பிரளயனின் நாடக நிகழ்வு: தமிழின் முக்கியமான நாடக ஆளுமையான பிரளயனின் ‘பட்டாங்கில் உள்ளபடி’ நாடகம் இன்று (26.04.25) சென்னை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தப்படவுள்ளது. நீதிபதி ஹரிபரந்தாமன், கவிஞர் தேவேந்திரபூபதி, இ.ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். சென்னைக் கலைக் குழு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றன. தொடர்புக்கு: 8778976485