எழுத்தாளர் ப.சிவகாமிக்கு நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் 2025க்கான வேர்ச்சொல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 90களுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் தோன்றிய தலித் எழுத்துகளின் முன்னெடுப்பை 80களில் தொடங்கிவைத்து இவரது ‘பழையன கழிதலும்’ நாவல் என மதிப்பிடலாம். தலித் வாழ்க்கையின் அழகியலையும் அவர்களது தனித்துவமன குரல்களையும் தமிழ் நவீன இலக்கியத்தில் அதே அடையாளத்துடன் முன்வைத்தது இந்த நாவல். இவரது ‘ஆனந்தாயி’ ஆணாதிக்க மிக்கக் கிராமச் சமூக நிலையை யதார்த்தமாகச் சித்தரித்த நாவல். இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அரசியல்வாதியாக இரு தேர்தல்களைச் சந்தித்துள்ளார். பஞ்சமி நில மீட்புக்காக, தலித் நில உரிமை இயக்கத்தை நடத்தியுள்ளார். வேர்ச்சொல் விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் நினைவுப் பரிசும் உள்ளடக்கியது.
இந்து தமிழ் திசை தொடருக்கு தூத்துகுடியில் துண்டுப் பிரசுரம்!
இந்து தமிழ் திசையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொடர் குறித்த அறிவிப்பு துண்டுப் பிரசுரம் தூத்துக்குடி நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. சலூன் நூலகம் புகழ் மாரியப்பன் சொந்த செலவில் இந்தத் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துள்ளார்.