க
விஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் முறைப்படி கர்னாடக இசை கற்றுக்கொண்ட பாடகரும்கூட. இதுவரை, 30-க்கும் மேற்பட்ட நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். தற்போது, குறுந்தொகையின் பிரிவுத் துயரைச் சொல்லும் ‘காதலர் உழையர்ஆகப் பெரிது’, ‘அருளும் அன்பும் நீங்கி’, ‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ ஆகிய மூன்று பாடல்களுக்கு மெட்டமைத்துப் பின்னணி இசையையும் பதிவுசெய்திருக்கிறார். திவாகர் சுப்பிரமணியம் இசையில் அனுக்கிரஹா ஸ்ரீதர் பாடியிருக்கும் இந்தப் பாடல்கள் சங்க கால இசைப்பண்களின் அடிப்படையில் அமைந்தவை. ஒலிப்பதிவுச் செலவை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஏற்றுக்கொண்டார். “இன்னும் 10 சங்கப் பாடல்களுக்கு மெட்டமைத்து வைத்திருக்கிறேன், தயாரிப்பாளர் கிடைத்தால் ஆல்பமாக வெளியிடலாம்” என்கிறார் ரவிசுப்பிரமணியன்.