இலக்கியம்

தேநீர் கவிதை: புத்தகங்களோடு நிலவில்...

உஸ்மான்

வாருங்கள் தோழர்களே

இனிமேலாவது

வாசிக்கப் பழகுவோம்

புத்தகங்களை!

கூடுவோம் வீதிகளில்

அனைவரும் ஒன்றாகக் குரலெழுப்பி

கூறுவோம்

இனி நூல்களே துணையென்று.

வீட்டுக்கு வீடு

ரேசன் கார்டு இருப்பது போல

இனி இருக்கட்டும்

எல்லா இல்லங்களிலும் நூலகம்.

காலையில் படிப்போம்

கடுங்கோடையில் படிப்போம்

மாலையில் படிப்போம்

மரங்கள் நிறைந்த

சோலையில் படிப்போம்...

பூமியில் இடமில்லை

என்றொரு நிலை வந்தால்

போய் விடுவோம் நிலவுக்கு

புத்தகங்களை எடுத்துக்கொண்டு!

SCROLL FOR NEXT