இலக்கியம்

கவிதைகளால் ஆன நாடகம்

செய்திப்பிரிவு

சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் புதிய நாடகம் ‘முடிவற்ற கதைகள்’ (Unending Stories) டிச. 23 ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் அரங்கேற்றப்படுகிறது.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாக வைத்து ப்ரஸன்னா ராமஸ்வாமி கதைக்கூறல் என்னும் புதிய வடிவிலான நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றி வந்தார். அசோகமித்திரன். தி.ஜானகிராமன், இமையம் ஆகியோரின் கதைகளை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டு மூன்று நாடகங்களை அரங்கேற்றியிருந்தார்.

இப்போது மூன்று கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய நாடகத்தை ‘முடிவற்ற கதைகள்’ என்னும் தலைப்பில் உருவாக்கியுள்ளார்.

நாடகம் குறித்துப் பேசிய ப்ரஸன்னா ராமஸ்வாமி “தமிழ் கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஜெர்மானியக் கவிஞர் பெர்தோல்ட் பிரெக்ட்., அமெரிக்கக் கவிஞர் லாக்ஸ்டன் ஹ்யுக்ஸ் ஆகியோரின் கவிதைகளை வைத்து சாதீயம், புராதன நாகரிகம் கொண்டவர்களான ஆப்ரிக்கர்களை அடிமைப்படுத்திய கொடுங்கோல் வரலாற்றின் துளிகள், தற்காலத்தில் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் துயர நிலை பற்றிய 'கதை'கள் நாடகமாகியிருக்கின்றன. கவிஞர் சேரனின் கவிதையும், வில்லியம் வாக்ஜர் என்னும் ஆப்ரிக்க அடிமை ஒருவரின் சுயசரிதையின் பகுதிகளும், பாலஸ்தீனக் கவிஞர் அபு நதா, ஆப்ரிக்கக் கவிஞர் பெஞ்சமின் செபானியா ஆகியோரின் கவிதைகளும் நான் எழுதியுள்ள பல பகுதிகளும் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன” என்கிறார்.

‘முடிவற்ற கதைகள்’ நாடகத்துக்கான அனுமதிச் சீட்டுகளை புக்மைஷோ (https://shorturl.at/sMQ47) இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

SCROLL FOR NEXT