பாபாசாகேப் அம்பேத்கர்
விலை : ரூ,220
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அம்பேத்கர் கட்டியெழுப்பிய அரசியலமைப்புச் சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, “நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம்'' எனச் சில ஆண்டுகளுக்கு முன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். காங்கிரஸ், இடதுசாரி உட்பட பிற கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரை முன்வைத்துப் பேசுவதை அவ்வப்போது காண முடிகிறது. மத்திய-மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பெயரில் நிறைய நலத் திட்டங்களையும் விழாக்களையும் அதிகளவில் முன்னெடுக்கின்றன.
தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்
கோமல். அன்பரசன்
விலை : ரூ.250
இந்த நூலில் சட்டத் துறை ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாது, அவர்களது வாதாடும் பண்பும் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, இடதுசாரி வழக்கறிஞராக அடையாளம்பெற்ற என்.டி.வானமாமலை நீதிமன்றத்தில் வாதாடும்போது எதிர்த் தரப்பு வழக்கறிஞரையோ வாதி/பிரதிவாதிகளையோ ஒரு சுடு சொல்கூடச் சொல்லமாட்டார் என நூலாசிரியர் கூறுகிறார். புகழ்பெற்ற லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தியாகராஜ பாகவதருக்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் வாதாடிய வி.எல்.எத்திராஜின் வாதாடும் திறனையும் சுவைபட அன்பரசன் விவரித்துள்ளார். வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வழக்கறிஞர்கள் நிறைந்த அறையில்கூட நீதிபதிகளுக்கும் தனக்கும் ஓர் அந்தரங்கமான உரையாடலைச் சாத்தியப்படுத்தக்கூடிய ஆளுமையாக எத்திராஜ் இருந்துள்ளார்.
பாதி நீதியும் நீதி பாதியும்
கே. சந்துரு
விலை : ரூ.250
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில், சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்படியுமே அணுக வேண்டும் என்ற தீர்க்கரீதியான பார்வையொன்றை, இந்த நூலில் இடம்பெற்றுள்ள நீதிநாயகம் கே.சந்துருவின் கட்டுரைகள் வழங்குகின்றன.