இலக்கியம்

நோபல் விருது: மலைகள் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன

மண்குதிரை

ஆழ்ந்த மூச்சுக்குப் பிறகு

மலை அங்கு வந்து நின்றது

மலைகள் அங்கு வந்து நின்றன

மலைகள் அப்படித்தான் அங்கே நிற்கின்றன

அவை உள்ளே

கீழ்நோக்கி

தங்களுக்குள்

மூச்சைப் பிடித்துக்கொண்டுள்ளன

கடலும் ஆகாயமும்

திரையோலமிடுகின்றன

இடி இடிக்கின்றன

அப்போது மலைகள்

மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன

- ஜான் ஃபோஸ்ஸே

ஆங்கிலம்: மே பிரிட் அகர்ஹோல்ட்

தமிழில்: மண்குதிரை

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம் எனப் பல வடிவங்களில் இலக்கியப் பங்களிப்பு செய்தவர் அவர். நார்வீஜியன் ஸ்நோர்ஸ்க் மொழியில் அவர் எழுதிவருகிறார்.

SCROLL FOR NEXT