இலக்கியம்

நூலின் குரல்: ஒரு நடிகர் உருவாகிறார்

செய்திப்பிரிவு

முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள், இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறுகிறது. ஒத்திகைகளின் மூலம் அந்த உள்ளுணர்வை திறமையாகக் கையாள்வது எப்படி என்பதை நூலாக எழுதியவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

ஒரு நடிகர் உருவாகிறார்

- கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி, தமிழில்: ஜார்ஜினா குமார், விலை ரூ 250, கண்ணதாசன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை - 600017, தொலைபேசி: 24332682.

SCROLL FOR NEXT