இலக்கியம்

தீபாவளி மலர்கள் – ஒரு பார்வை

செய்திப்பிரிவு

ன்மிகத்தில் தொடங்கி வாழ்வியல் வரை பல்வேறு துறைகளுக்குள் புகுந்து புறப்படும் கட்டுரைகள் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன. மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் நேர்காணலும் ஆழம் நிறைந்தவை.

சிறுகதைகளும் கவிதைகளும் பாயசத்துக்கு இடையே கடிபடும் வறுத்த முந்திரியைப் போல் அலாதி யாக இருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள வண்ணதாசன் சிறுகதையில் வருகிற ‘பச்சை’யோடு கைகோத்தபடி, வேரோடு பெயர்ந்து விழுந்த மரத்துக்கு முன் அமர்ந்து நம்மையும் அழவைத்துவிடுகிறார். முழுப்பக்க கடவுளர் ஓவியங்களை வரையும் ஓவியர் சிவாஸின் நேர்காணல் மலருக்கு வேறொரு வண்ணம் சேர்க்கிறது.

கல்கி

காஞ்சி மகா சுவாமிகளின் அருளுரையுடன் கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என அரிய புதையலாக வெளிவந்திருக்கிறது. ஆண்டாளின் மேன்மையை விவரிக்கும் வே.எழிலரசுவின் கட்டுரை ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சுகிறது. பத்ம வாசனின் ஆண்டாளின் தத்ரூப அட்டைப்பட ஓவியம் அருளைச் சிந்துகிறது.

சீதா ரவியின் `சென்னையில் திருவாரூர் ’ நாடகம் ரகளை ரகம். இந்திரா பார்த்தசாரதியின் `பாரதியின் அகமும் புறமும்’ கட்டுரையில் பாரதியின் விஸ்வரூபத்தை தரிசிக்கலாம். மறந்துவிட்ட கலை வடிவமான ஹரிகதையின் சிறப்பைச் சொல்கிறது சாருகேசியின் கட்டுரை.

லரும் நினைவுகள்’ என்ற தலைப்பில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், இயக்குநர் ஸ்ரீதர், மனோரமா ஆகியோருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் தங்கள் நினைவுகளை மீட்டியிருக்கிறார்கள். அடுத்து, ரசனையுடன் படித்து மகிழ்வதற்கு சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர், கிருபானந்த வாரியாரைப் போன்று கதாகாலட்சேபம், உபன்யாசம் ஆகிய கலைகளில் புகழ்பெற்று விளங்கிய முக்கியமானவர்கள் பலர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ந்துப் பண்டிகையான தீபாவளியை முகலாய மன்னர்கள் அக்பர், ஷாஜகான் ஆகியோர் விமரிசையாகக் கொண்டாடியதை விளக்கும் ‘முகலாய தீபாவளி’ பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு அரசர்கள் அளித்த முக்கியத்துவத்தைக் கூறுகிறது. தமிழ் நவீன இலக்கியத்தின் மிகப் பெரும் ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறியப்படாத முகத்தைச் சொல்கிறது, அவர் மனைவி கமலா ராமசாமியின் பேட்டி. மணியம் செல்வன், ட்ராட்ஸ்கி மருது, மாருதி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்கள் தங்களது அபிமான கலைப் பொக்கிஷங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கும் ‘ஓவிய மன்னர்களின் கலைப் பொக்கிஷங்கள்’ கட்டுரை புதுமை.

காசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், பிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட்ட அம்சங்களை சினிமா பகுதி அலசுகிறது. வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா எனப்படும் ‘தாமிரபரணி நால்வரை’ ஒன்றாகச் சந்திக்க வைத்த பதிவு புதுமை.

புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, பிரமிள், சுந்தர ராமசாமி என தமிழ் இலக்கிய மேதைகள் மொழிபெயர்த்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இலக்கிய ரசனையை மேம்படுத்தக் கூடியவை. நம் வாழ்க்கையில் நெருக்கமாக உறவாடிக் காணாமல் போய்விட்ட பல பொருட்கள், அம்சங்கள் குறித்து மலரின் குறுங்கட்டுரைகள் அசைபோட வைக்கின்றன.

கி.வா.ஜ., புலியூர்க் கேசிகன், பாபநாசம் சிவன், விக்கிரமன் போன்ற ஆளுமைகளின் வாரிசுகள், மூத்தவர்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். ‘பழைய இலக்கியம்’, ‘தற்கால இலக்கியம்’ என்ற தலைப்புகளில் இலக்கியப் போக்குகள் ஆராயப்பட்டிருக்கின்றன. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மரம் நடுவதன் முக்கியத்துவம் பற்றி எழுதியிருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், நடிகர் விசு ஆகியோரின் நேர்காணல்களும் சுவாரஸ்யம்.

லங்கைத் தொழில் அதிபர் தெ.ஈஸ்வரனின் விரிவான நேர்காணலில் அவரது வாழ்க்கையின் பல இனிய நினைவுகள் நயமாக வெளிப்பட்டிருக்கின்றன. பேட்டியில் ஒலித்த மதுரை சோமு குறித்த நினைவுகள் அபாரம். கார்ட்டூனிஸ்ட் கேஷவ்வின் பேட்டி கவனிக்கத்தக்கது.

இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், தேவிபாலா உள்ளிட்ட பலரின் கதைகளும் தொல்லியலறிஞர் நடன. காசிநாதனின் `தமிழர் எழுத்தறிவு’, மாத்தளை சோமுவின் `புலம் பெயர்ந்த இராமாயணக் காவியம்’, ஆர்.வி.ராஜனின் `டிராகன்களின் தேசம் பூடான்’ போன்றவை அருமை.

பெண்ணின் பெருமை, கந்தன் கருணை என அறிவுரையும் ஆன்மிகமும் கலந்த கதம்பமாக வெளிவந்துள்ளது. ‘சமயம் வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில், மொழிக்கும் சமயத்துக்குமான உறவு சொல்லப்பட்டிருக்கிறது. ‘அசாதாரணமான மனிதர்கள்’ என்ற பெயரில், சில சாதனையாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியப் பண்பாட்டைப் பற்றிப் பெருமை பேசும் சிறுகதைகள், பரவலாகத் தெரியாத ஆலயங்கள், ஆன்மிகத் துணுக்குகள், ஆன்மிகப் பயணக் கட்டுரைகள் மலரில் நிறைந்திருக்கின்றன.

சுகி சிவம், சுதா சேஷையன் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிக சொற்பொழிவாளர்களின் கட்டுரைகள் ஆன்மிகச் சிந்தனையைத் தூண்டுபவை. பக்த சூர்தாஸ், யோகி ராம்சுரத்குமார், காரைக்கால் அம்மையார் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அருமை. ராஜாஜியின் ’கூனி சுந்தரி’ சிறுகதையும் கல்கியின் ‘தயிர்ப்பாட்டு’ கட்டுரையும் இலக்கிய ரசிகர் களுக்கான விருந்து.

’மாதமொரு தமிழறிஞரைப் போற்றுவோம்’ என்ற கட்டுரை தமிழ்த் தொண்டாற்றிய 12 அறிஞர்களின் பிறந்த தினங்களைப் பட்டியலிட்டு அவர்களை அந்தந்த மாதங்களில் நினைத்துப் போற்றக் கோருகிறது.

மிழகத்துக் கோவில்கள் பலவற்றின் சிறப்பை விளக்கும் கட்டுரைகள் மலரில் பரவலாக இடம்பெற்றுள்ளன. புராணங்கள், உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் மலருக்கு அணிசேர்க்கின்றன.

ஆன்மிகம் தவிர, நம்மாழ்வார் முதல் பாரதி வரை பலரை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்ற மொழிப்பெயர்ப்பாளர் ஏ.கே.ராமானுஜம் பற்றிய கட்டுரை அவரது பணியின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. ’காலந்தோறும் கல்வி’ என்ற கட்டுரை நம் கல்வி முறையில் சில சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கிறது.

டவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் நடக்கும் இடைவிடாத சர்ச்சைகளைப் பற்றி விரிவாக அலசுகிறது கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதியிருக்கும் `கணக்கும் கடவுளும்’ கட்டுரை. மனதைக் கட்டுப்படுத்தும் யோகக் கலை, மகா காளியின் அக்கினிக்குஞ்சு, தியாக ப்ரும்மம் கண்ட ராமதரிசனம், திருமந்திரம் எனும் பொக்கிஷம் உள்ளிட்ட பல படைப்புகளும் படிப்பவர்களின் மனதில் ஆத்ம பலத்தை அதிகரித்து, ஆன்மிக வெளிச்சத்தைத் தருபவை.

SCROLL FOR NEXT