படம்: ம.பிரபு

 
வாழ்வியல்

“இயந்திரத்துக்கும் சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுத்து விட்டோம்” - ஏஐ குறித்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆதங்கம்

செய்திப்பிரிவு

அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நம்மை ஆட்கொண்டு விட்ட நிலையில், இயந்திரத்துக்கும் சிந்திக்கும் திறனை நாம் கற்றுக்கொடுத்து விட்டோம். இதே நிலை நீடித்தால் மனித ஆற்றலுக்கு மதிப்பில்லாமல், போய் விடும் என நூல் வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆதங்கம் தெரிவித்தார்.

இந்திய வழக்கறிஞர்கள் சங் கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய "வாழ்க்கை சட்டம் மற்றும் இலக்கி யத்தில் ஒரு நீதிபதியின் பிரதி பலிப்புகள்" என்ற தலைப்பிலான நூல் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சாமிதுரை வரவேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா அறிமுக உரை நிகழ்த்தினார்.

          

விழாவுக்கு தலைமை வகித்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, "நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த புத்தகத்தை பன்முக கண்ணோட்டத்துடன், அதீத ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் எழுதியுள்ளார். யாராக இருந்தாலும் இறுதி வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கம்பரா மாயணம் போன்ற சாகா வரம் பெற்ற நூல்களுக்கு மொழி இருக்கும் வரை அழிவே கிடையாது. எந்த புத்தகமாக இருந்தாலும் அதை படிப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அந்த வகையில் இந்த புத்தகமும் நிச்சயமாக இளம் சட்ட மாணவர்கள் மத்தியில் நல்ல நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குற்றம் இழைக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண் டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன், இந்த காரியத்தை செய்தார்கள் என்பதை சீர் தூக்கி பார்த்து ஆராய வேண்டும். பெரும்பாலான குற்றங்கள் தெரிந்து நடப்பதில்லை.

இன்று உலகம் முழுவதும் சட்டம், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்மை ஆட்கொண்டு விட்டது. இந்தச் சூழலில் இயந்திரத்துக்கும் சிந்திக்கும் திறனை நாம் கற்றுக்கொடுத்து விட்டோம். இதே நிலை நீடித்தால் மனித ஆற்றலுக்கு மதிப்பில்லாமல், அன்பு, பாசம், மனித நேயம் காணாமல் போய் விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றாலும், அந்த வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டை, எல்லையை மீறியதாக இருக்கக்கூடாது. வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என வாழ்வின் இரு பக்கங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.

ஆனால் இப்போ துள்ள இளைய தலைமுறை சிறு தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டுபோய் விடுகின்றனர். அதற்கு நீதிபதி ஆனந்த் ஆனந்த் வெங்கடேஷ் எழுதியுள்ள இது போன்ற நூல்கள் நல்ல மனமாற்றத்தை தூண்டிக்கொண்டே இருக்கும். இவ்வாறு பேசினார்.

பட்டிமன்ற பேச்சாளர் டிராஜா பேசும்போது, வாதாடும் கலையை சிறப்பாக செய்தால் எப்படி வெற்றியடைய முடியும் என்ற சூட்சும மந்திரத்தை நூலாசிரியர் தெளிவாக எடுத் துரைத்துள்ளார் என்றார். பார் கவுன்சில் உறுப்பினரும், வழக்கறிஞருமான டி.சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக நூலாசிரியரான நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஏற்புரையாற்றுகையில், நூலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களைப் பார்த்து எத்தகைய சிந்தனை, எத்தனை வரலாறு, எத்தகைய பிரதிபலிப்புகள் என எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். நாமும் புத்தகம் எழுத வில்லையே என 2020ல் ஏற்பட்ட ஏக்கம் இப்போது தீர்ந்துள்ளது. குழந்தையை பிரசவிக்கும் தாய்க்கு கிடைக்கும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நிற்கிறேன் என்றார்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.தண்டபாணி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கே.என்.பாஷா, ஆர்.என்.மஞ்சுளா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், ஐசக்மோகன் லால், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலை வர் ஜி.மோகன கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்வாகி சண்முக நாதன் நன்றி கூற, இந்திய வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.ராம மூர்த்தி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT