சென்னை: பொதுமக்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள R.M.B கிளினிக் சார்பில் வரும் மார்ச் 1 ஆம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாம் வரும் மார்ச் 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. R.M.B கிளினிக், 24/2, வேலாயுதம் தெரு, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் எதிரில் இம்முகாம் நடைபெறவிருக்கிறது.
முகாமில் பொதுமக்களுக்கு பொது உடல் பரிசோதனை, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, இதய பரிசோதனை (ECG), எலும்பு திண்மை பரிசோதனை ஆகியவை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகின்றன.
மேலும் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்காக Dyslexia, ADHD போன்ற கற்றல் மற்றும் கவனக் குறைபாடுகளுக்கான இலவச ஆரம்ப பரிசோதனை மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட இருக்கிறது.
அதோடு, இந்த முகாமில் நாள் பட்ட தலைவலி, வலிப்பு நோய், கை கால் மரத்து போதல், கழுத்துவலி, இடுப்பு வலி, தலையில் ஏற்பட்ட காயத்தின் பின் விளைவுகள் மனஅழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, எந்தசெயலிலும் நாட்டமின்மை, நினைவாற்றல் குறைவு, படிப்பில் கவனமின்மை, அதிக துருத்துறுப்பு ஆகியவற்றுக்கு இலவசமாக உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
முகாமில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் முன்பதிவிற்காக 7810082651 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.