வாழ்வியல்

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் தந்தையின் உடல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு தானம்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு மாவட்ட செயலாளரின் தந்தையின் உடலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆர்.ரகுராமன். இவரது தந்தை ஆர்.ராஜசேகரன் (93). இவர் செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாத்தில் மகள் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் அவர் வயது முதிர்வு கார ணமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில், மருத்துவம் பயி லும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல்தானம் செய்யப் பட்டது.ராஜசேகரனின் உடலை அவரது மகன் ரகுராமன் மற்றும் குடும்பத்தினர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை உடற்கூறு இயல் துறை துணை பேராசிரியர்கள் செந்தில்குமார், விண்ணரசி ஆகியோரிடம் வழங்கினர்.

அவரதுஉடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT