வாழ்வியல்

செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வீட்​டில் வளர்க்​கும் செல்ல நாய்க்​கு, குடும்​பத்​தினர் வளை​காப்பு நடத்​திய சம்​பவம் சமூக ஊடகத்​தில் வைரலாகியுள்ளது.

வீட்​டில் வளர்க்​கப்​படும் செல்லப் பிராணி​கள், அதிக பாசத்​துடன் பழகு​வ​தால் அவை​, அவர்​களின் குடும்ப உறுப்​பினர்​களாகவே மாறி​விடு​கின்​றன. சிலர் நாய்​களுக்கு பிறந்தநாள் கொண்​டாடி கேக் வெட்டி மகிழ்​கின்றனர்.

தற்​போது ஒரு குடும்​பம் அதை​யும் தாண்​டி, செல்ல நாய்க்கு வளை​காப்பு நிகழ்ச்​சியை நடத்தியுள்ளது. விரை​வில் குட்டி போடப் போகும் தங்​கள் வீட்டு நாயை புத்​தாடை, மாலை, ஆபரணங்​கள் அணிவித்து அலங்கரித்தனர்.

நண்​பர்​கள், உறவினர்​கள்​,​முன்​னிலை​யில் வளை​காப்பு சம்​பிர​தா​யங்​கள் முறைப்​படி நடத்​தப்​பட்​டன. செல்ல நாய்க்கு அதன் முகத்​தில் உரிமை​யாளர் மஞ்​சள் பூசி நலுங்கு வைத்​தார். அந்த நாயும் மகிழ்ச்​சி​யுடன் போட்​டோவுக்கு போஸ் கொடுத்​தது. ”தா​யாகப் போகிறாள்” என்ற தலைப்​பில் இன்​ஸ்​டா கி​ராமில் வெளி​யான இந்த வீடியோ பலரை கவர்ந்​தது.

அவர்​கள் நாய்க்கு வளை​காப்பு நடத்​திய குடும்​பத்​தினரை பாராட்டி​யுள்​ளனர். மனிதர்​களைப்​போல் செல்​லப் பிராணி​களை​யும் மக்​கள் நேசித்து மகிழ்​வது அழகான கொண்​டாட்​டம் என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். ”விலங்​கு​களை இது போல் நேசிப்​பவர்​கள் பரிசுத்​த​மான இதயம் கொண்​ட​வர்​கள்” என மற்​றொரு​வர்​ கருத்​து தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT