வாழ்வியல்

இளம் தலைமுறையினர் உறவுகளை அறிய சங்கமித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 180 பேர் - சிவகங்கை அருகே நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே இளம்தலைமுறையினர் உறவுகளை அறிந்துகொள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 180 பேர் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கொளுக்கட்டிபட்டியைச் சேர்ந்த தம்பதி அருளபாக்கி, நாச்சம்மாளுக்கு 3 மகன்கள், 6 மகள்கள் இருந்தனர். இவர்களில் தற்போது காசி (87) மட்டுமே உள்ளார். மேலும் 9 பேரது வாரிசுகள் 180 பேர் மேலமங்கலம், ஒக்கூர், மேலப்பூங்குடி, திருச்சி, சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

மலரும் நினைவுகள்: அவர்களது குடும்பத்தில் உள்ள 3-ம் மற்றும் 4-ம் தலைமுறையினர் உறவினர்களை அறியாமல் இருந்தனர். இதையடுத்து தங்களது சொந்த பந்தங்களை அறிந்து கொள்வதற்காக ஒன்று கூட முடிவு செய்தனர்.

இதற்காக 3 மாதங்களாக திட்டமிட்டு வாட்ஸ்-ஆப் மூலம் ஒருங்கிணைத்து நேற்று ஒக்கூரில் சங்கமித்தனர். அப்போது அவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். செல்ஃபி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உறவுகளை அறிய ஒன்று கூடிய இந்த விழா பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT