வாழ்வியல்

‘துபாயில் செலவினம் மிக அதி​கம், பேசாமல் இந்தியாவிலேயே இருந்திருக்கலாம்’ - கொல்கத்தா இளைஞரின் வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

துபாய் / கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த ராகுல் பாலா துபாயில் சமையல் கலைஞ​ராக பணிபுரி​கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்​துள்ள வீடியோ​வில், “வேலைக்​காக துபாய்க்குவர நினைப்​பவர்​கள் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்​டும்.

நகரத்​தின் அதி​கப்​படி​யான வாழ்க்​கைச் செலவு காரண​மாக, ஒரு சாதாரண தொழிலாளி தினசரி செலவுகளைச் சமாளிப்​பதும், குடும்​பத்​தினருக்​குப் பணம் அனுப்புவதும் மிக​வும் கடினம்.

வெளி​நாடு செல்​லும் கனவு நனவான போதி​லும், துபாய் அனுபவம் இந்​திய வாழ்க்​கை​யின் அரு​மையை எனக்கு உணர வைத்​துள்​ளது. குறிப்​பாக, அன்​றாட அத்​தி​யா​வசி​யத் தேவைகளுக்குச் செல​வழிக்க வேண்​டிய தொகை மிக அதி​க​மாக இருப்​பது இங்கு வாழ்​வ​தில் சிரமத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

துபா​யில் ஒரு சாதாரண உணவுக்கே குறைந்​த​பட்​சம் 10 திர்​ஹாம் (சு​மார் ரூ.260) வரை செல​வாகிறது. இந்​தப் பதிவு சமூக வலை தளப் பயனர்​களிடையே பெரும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

SCROLL FOR NEXT