பாட்னா: இந்தியரை மணந்துகொண்ட பின்னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்மணி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம் ஜார்ஜியாவில் வசித்து வந்த ஹோப் என்ற பெண், 2023-ல் பிஹாரைச் சேர்ந்த அபிஷேக் சிங்கை திருமணம் செய்துகொண்டு கடந்த 2025-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.
பிஹாரில் தனது குடும்பத்தாருடன் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்திய உடைகளை அணிந்து, இந்திய நாட்டு பழக்க வழக்கங்களை ஹோப் கடைப்பிடித்து வருகிறார். உணவு வகைகளைத் தயாரித்து அதை வீடியோவாக வெளியிட்டு அசத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள அவரது வீடிோயக்கள் இந்தியாவின் அன்றாட, எளிமை வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகின்றன.