பாரிஸ்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பல மருத்துவர் உசாமா அகமது, தனது பாட்டியை பிரிட்டன் நாட்டிலிருந்து பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸ் அழைத்து சென்றுள்ளார். தனது பாட்டியின் பயணத்தை அவர் சமூக வலைதளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அது தற்போது நெட்டிசன்களின் நெஞ்சை வென்றுள்ளது.
‘எங்கள் பாட்டியின் வாழ்வை சிறப்பாக வாழச் செய்வது’ என்ற கேப்ஷன் உடன் இந்த வீடியோவை மருத்துவர் உசாமா அகமது பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தான் தங்கியுள்ள அறையின் சாளரத்தின் வழியே வெளிப்புற அழகை ரசிக்கிறார். பாரிஸ் நகரில் தன் பேரனுடன் உற்சாக நடைபோடும் அவர், அப்படியே ஷாப்பிங் மேற்கொள்கிறார். இடையே போட்டோவுக்கு புன்னகை பொங்க போஸ் கொடுக்கிறார். இது அனைத்தையும் நேர்த்தியாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மருத்துவர் உசாமா பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பதிவில் ‘அடுத்து நாம் எங்கு போகலாம்?’ எனவும் கேட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சுமார் 3.5 லட்சம் பார்வையை இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் பெற்றுள்ளது. கமெண்ட்களும் இந்த பதிவுக்கு குவிந்துள்ளது.
‘இது காசு, வேலை போன்றவற்றை காட்டிலும் மதிப்பு மிக்கது’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘உலகம் அன்பால் ஆனது’ என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.