கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரம்பன் ரவணிகுமார் (32). ஐடிஐ படித்துள்ளார். ஆட்டோ ஓட்டி வருகிறார். மிமிக்ரி கலைஞரான இவர், தனது அக்கா மகன் சிவாவுடன் (19) சேர்ந்து சொந்த வேலை காரணமாக நேற்று சிதம்பரம் சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதனை குறைக்கும் வரையில் சிதம்பரம் வரை சாலையில் செல்லும்பொழுது தலையில் தண்ணீர் ஊற்றியபடி இருவரும் சென்றுள்ளனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி இருப்பதால் மக்கள் யாரும் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போல செய்ததாக கூறிய ரவணிகுமார், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அப்பகுதியில் சென்றவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.