சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமான மீன்களை அள்ளிச் சென்றனர்.
சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டியில் உள்ள கூவனக் கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கிராம முக்கிய பிரமுகர்கள் கண்மாய் அருகேயுள்ள அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, மீன்களை பிடிக்க அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்க்குள் சென்று கச்சா, பரி, ஊத்தா போன்றவை மூலம் மீன்களை பிடித்தனர். ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்தனர். அனைவருக்கும் ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.