எம்.சத்திரப்பட் டியில் ஏப்.30-ல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் திமுகவினர் . படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
வாழ்வியல்

மதுரை அருகே ஏப்.30-ல் ஜல்லிக்கட்டு: ரூ.1 கோடி பரிசு மழை; அனைத்து காளைகளுக்கும் தங்க காசு

செய்திப்பிரிவு

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மதுரை அருகே எம்.சத்திரப் பட்டியில் ஏப்.30-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக எம்.சத்திரப்பட்டியில் ஏப்.30-ல் ஜல்லிக்கட்டு நடத்த, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஏற் பாடுகளை செய்து வருகிறார்.

இதுவரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் மட்டுமே முதல் பரிசாக கார்கள் வழங்கப்பட்டன. தற்போது எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டிலும் சிறந்த வீரர், காளைக்கு கார்கள் வழங்கப்பட உள்ளன. 2-வது பரிசாக புல்லட், பைக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசுகள் வழங்கப்படுகின்றன.

மற்ற போட்டிகளில் இல்லாத சிறப்பாக இந்தப் போட்டியில், தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறந்த வீரர், காளைகளை இந்தப் போட்டியில் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதனால், போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டி தொடக்க விழாவில் 18 தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: எம்.சத்திரப்பட்டி மிகுந்த பாரம் பரியமுள்ள கிராமம். முன்னாள் முதல்வர் அண்ணா 1966-ம் ஆண்டில் இக்கிராமத்துக்கு வந்து அறிவுப் பூங்கா மையத்தை திறந்து வைத்துள்ளார்.

போட்டியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், விழா மேடை, பார்வை யாளர்கள் பாதுகாப்பாக அமர்ந்து போட்டியை கண்டுகளித்திட அரங்கு என அனைத்து முன்னேற் பாடு பணிகளும் நடந்து வருகிறது.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT