வாழ்வியல்

சென்னையில் பருத்தி ஆடைகளுக்கான மல்மல் மேளா

நிஷா

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பருத்தி ஆடை உலகில் முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாக ‘தி ஷாப்’ திகழ்கிறது. இந்தியக் கைவினை சமூகங்களின் பழமையான கலை வடிவமைப்பை, சமகால வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜவுளி உலகின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு இந்நிறுவனம் புத்துயிர் அளித்துவருகிறது. இந்தக் கோடைக் காலத்தில் இந்நிறுவனம் தனது பிரத்தியேக வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வருகிறது.

இந்நிறுவனம் வரும் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி) காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தனது புதிய தயாரிப்பான 'மல்மல் மேளா'வை அமேதிஸ்ட்டின் தி ஃபோலி அரங்கில் அறிமுகப்படுத்துகிறது.

மென்மையான பருத்தியாலும் நேர்த்தியான நெசவுகளாலும் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகள் கோடைக்காலத்துக்கு உகந்தவை; சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டவை.

பெண்களுக்கான குர்தாக்கள், மேலாடைகள், கால்சட்டைகள் போன்ற ஆடைகளும், டேபிள் லினன், நாப்கின்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட வீட்டு அலங்காரப் பொருட்களும் இந்த மேளாவில் ரூ.700/- முதல் ரூ.5,000/- வரையிலான விலை வரம்பில் கிடைக்கும்.

கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க தி ஷாப்பின் மல்மல் ஆடைகள் உதவும். இயற்கையான மஸ்லீனில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடைகள் மென்மையானவை; சருமத்துக்கும் ஏற்றவை. அணிவதற்கு லேசாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும் இந்த ஆடைகள் 100 சதவீத பருத்தி துணியால் உருவாக்கப்பட்டவை.

கொல்கத்தாவின் தெருவோரக் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் திஷா தொண்டு நிறுவனம், தில்லியின் தெருவோரக் குழந்தைகளுக்கான சலாம் பாலக் அறக்கட்டளை, சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் கேடிஎம்எல் பள்ளி ஆகியவற்றுக்கு தி ஷாப் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தி ஷாப்பின் மல்மல் மேளா
இடம்: தி ஃபோலி, அமேதிஸ்ட்
தேதி: ஏப்ரல் 28, 29
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை

SCROLL FOR NEXT