திருப்புவனத்தில் உள்ள அரிவாள் பட்டறையில் தயாரிக்கப்பட் டுள்ள 21 அடி மற்றும் 18 அடி நீள அரிவாள்கள் 
வாழ்வியல்

அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு திருப்புவனத்தில் 21 அடி நீள அரிவாள் தயாரிப்பு

செய்திப்பிரிவு

திருப்புவனம்: அழகர்கோயிலில் உள்ள பதினெட் டாம்படி கருப்பணசாமிக்கு 21 மற்றும் 18 அடி நீள அரிவாள்கள் திருப்புவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்புவனம், திருப்பாச் சேத்தியில் அதிகளவில் அனைத்து விதமான அரிவாள்களும் தயாரிக் கப்படுகின்றன.

இந்நிலையில், போலீஸார் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப் பதை நிறுத்திவிட்டனர். தற்போது, விறகு வெட்டுவதற்கான ஒரு அடி நீள அரிவாளை மட்டும் தயாரிக் கின்றனர். அதுவும், ஆதார் அட்டை கொடுத்தால் மட்டுமே தயாரித்துக் கொடுக்கின்றனர். கோயில் களில் நேர்த்திக்கடன் செலுத்துவ தற்காக அரிவாள்கள் தயாரித்து தரப்படுகின்றன.

திருப்புவனம் மேல ரத வீதியில் உள்ள அரிவாள் பட்டறைகளில் நேர்த்திக்கடனுக்காக அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சதீஷ் என்பவரது பட்டறையில், அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சாமிக்கு நேர்த்திக்கட னாக மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொடுத்த ஆர்டரின் பேரில், 21 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 450 கிலோ. இதேபோல், திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதி பக்தர்களின் ஆர்டரின்பேரில், பதினெட்டாம்படி கருப்பணசாமிக்காக தலா 18 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு அரி வாள் 260 கிலோவும், மற்றொரு அரிவாள் 180 கிலோவும் உள்ளன. நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிக்க எடையின் அடிப்படையில் அடிக்கு ரூ.2,000 வரை கூலி வாங்குகின்றனர்.

SCROLL FOR NEXT