வாழ்வியல்

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளி சந்தையில் கோடை கொண்டாட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு அருகே கங்காபு ரத்தில் அமைந்துள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் கோடை கொண்டாட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இது குறித்து, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் டி.பி.குமார் கூறியதாவது: டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யுஆர்சி தேவராஜன், நிர்வாக இயக்குநர் பி.ராஜ சேகர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மே 31ம் தேதி வரை கோடை கொண்டாட்டம் (டெக்ஸ்வேலி சம்மர் ஜாலி)45 நாட்கள் நடைபெற உள்ளது.தினசரி அகன்ற திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப் படுத்தும் வகையில் ஈரோடு பிரீமியர் லீக் (ஈபிஎல்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்று (16-ம் தேதி) மாலை மேஜிக் ஷோ, இசை, சிரிப்பு நிகழ்ச்சிகளும், நாளை (17-ம் தேதி) முதல் ஏப்.26-ம் தேதி வரை ஓவியப் பயிற்சி முகாமும் நடக்கின்றன. ரோலர் ஸ்கேட்டிங், செஸ், மல்யுத்த விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நாளை (17-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளன.

குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5,000, 3-ம் பரிசு ரூ.3,000 வழங்கப்படும். மே 13-ல் உணவுத் திருவிழா தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த 9 நாட்களும் ‘தி மெகா பஜார்’ என்ற பெயரில் இரவு நேரச் சந்தை நடக்கிறது.

மே 14-ல் நடக்கும் ‘தாய அரசி 2023’ என்ற தாயம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5,000, 3-ம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. மே 12 முதல் 15-ம் தேதி வரை ஆட்டோமொபைல் கண்காட்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்கும் வகையில் ஈரோடு, பவானி, சித்தோடு பகுதிகளில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT