பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.பள்ளிப்பட்டியில் கெபித்திரு விழாவை யொட்டி நடந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராள மானோர் பங்கேற்றனர். 
வாழ்வியல்

பி.பள்ளிப்பட்டியில் கெபித்திருவிழா: ஏப்.21-ல் 55 மேடைகளில் 555 பேர் நடிக்கும் நாடகம்

செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டியை அடுத்த பையர் நத்தம் அருகே பி.பள்ளிப் பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் லூர்துபுரம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் கெபித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கியுள்ளது.

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இத்திரு விழாவில், மதங்களை கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்பார்கள். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற் பார்கள். இவ்விழாவின் சிறப்பு நிகழ்வான `மாசற்ற ரத்தம்' என்ற இயேசு கிறிஸ்துவின் வரலாற்று நாடகம் வரும் 21-ம் தேதி நடக்க உள்ளது.

லூர்துபுரம் கெபி மலையில் 555 நடிகர்கள், 55 மேடைகளில் மலை முழுவதும் மேடைகள் அமைக்கப்பட்டு, ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியுடன், உலகம் உருவானது முதல் இயேசு பிறந்து இறந்தபின் உயிர்த்தெழுந்த நாள் வரையிலான நிகழ்வுகள் நடித்து காண்பிக்கப்படும். இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நாடகம் நடைபெறும். விழாவின் தொடக்கமாக கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி இரவு நடந்தது.

லூர்து அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஆலய பங்கு மக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வந்தனர். தருமபுரி முதன்மை மறை மாவட்ட குரு அருள்ராஜ் மற்றும் ஆலய பங்குத்தந்தை உள்ளிட்டோர் கொடிக்கு சிறப்பு ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தினசரி திருப்பலி நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT