வாஷிங்டன்: உலகில் அதிகம் படித்த மனிதர் என அறியப்படுகிறார் அப்துல் கரீம் பங்குரா (Abdul Karim Bangura). 18 மொழிகளை இவர் பேசுவார் எனவும், 5 பிஎச்டி பட்டங்களைப் பெற்றவர் இவர் எனவும் தெரிகிறது. இந்த படித்த மாமேதை குறித்துப் பார்ப்போம்.
அப்துல் கரீம் பங்குரா, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியேரா லியோனிக் குடியரசை சேர்ந்தவர். 1953-ல் பிறந்துள்ளார். அந்த நாட்டின் ஃப்ரீடவுன் பகுதியில் பள்ளிக்கல்வி முடித்ததுள்ளார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஆசிரியர், கல்வி துறை நிர்வாகி, ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி என பல பரிமாணங்களில் இயங்கி வருகிறார்.
இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் இளங்கலை, சர்வதேச விவகாரத்தில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார். பொலிட்டிகல் சயின்ஸ், பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல், மொழியியல் என ஐந்து பிஎச்.டி. பட்டங்களை பெற்றுள்ளார். 35 புத்தகங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளார். அமெரிக்காவில் முக்கிய பல்கலைக்கழகங்களில் இருந்து அவர் இந்த பட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஆங்கிலம், டெம்னே, மெண்டே, கிரியோ, ஃபுலா, கோனோ, லிம்பா, ஷெர்ப்ரோ, கிஸ்வஹிலி, ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு, அரபு, ஹீப்ரு, ஜெர்மன் மற்றும் ஸ்வீடிஷ் என 18 மொழிகளில் பேசும் வல்லமை கொண்டவர். தற்போது வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார்.
இத்தனை சாதனைகளைச் செய்ய அவரது தந்தைதான் அவருக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார் எனச் சொல்கிறார் அப்துல் கரீம் பங்குரா.