மூன்றாவது மகளுடன் மார்க் ஸூகர்பெர்க் 
வாழ்வியல்

தங்களது 3-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் மார்க் - பிரிசில்லா தம்பதியர்

செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: தங்களது மூன்றாவது பெண் குழந்தையை பூமிக்கு வரவேற்றுள்ளனர் மார்க் ஸூகர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதியர். இந்த குழந்தைக்கு ஆரேலியா (Aurelia) சான் ஸூகர்பெர்க் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே மாக்சிமா (2015), ஆகஸ்ட் (2017) என இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியருக்கு உள்ளனர்.

கடந்த 2003 முதல் டேட் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும் சான் இணையர் 2012-ல் மண வாழக்கையில் இணைந்தனர். பிரிசில்லா சான், மார்க் ஸூகர்பெர்க் உடன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவி.

மார்க் ஸூகர்பெர்க், ஃபேஸ்புக்கை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர். தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இயங்கி வருகிறார்.

SCROLL FOR NEXT