மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் 7-வது இயற்கை வாழ்வியல் முகாம் நடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக பொருளாளர் மா.செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.
இதில், மேலூர் அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை நலமைய மருத்துவர் அக்னேஷ் அனாமிகா, ‘மன உடல் ஆரோக்கியத்துக்கான இயற்கை வாழ்வியல்’ எனும் தலைப்பிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் உமாராணி, ‘முழுமையான வாழ்வுக்கு யோகா, தியானம், மூச்சு பயிற்சி (பிரணாயாமம்)’ எனும் தலைப்பில் பேசினர்.
இதில் தியானம், மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்றோருக்கு பழங்கள், மூலிகை டீ, முளைக்கட்டிய பயறு வழங்கப்பட்டது. முகாமில் யோகா மாணவர்கள், இயற்கை வாழ்வியல் அறிஞர்கள், அருங்காட்சியக ஊழியர்கள் லில்லி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் செய்திருந்தார்.