பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் 494 பாதுகாப்பு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சக்தி நிவாஸ் என்றழைக்கப்படும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நேரடியாக அளிக்கிறது. அதனடிப்படையில், பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் 494 பாதுகாப்பு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன
இவற்றில் தமிழ்நாட்டில் 54 விடுதிகளும், புதுச்சேரியில் 3 விடுதிகளும் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டில் இவ்விடுதிகளுக்காக ரூ.392.18 லட்சம் வழங்கப்பட்டதில் அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டது. 2021-22-ம் நிதியாண்டில் ரூ.350.25 லட்சம் வழங்கப்பட்டது. அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டது.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.