நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சந்திப்பு விழாவில், 48 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்த முன்னாள் மாணவிகள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 
வாழ்வியல்

நாமக்கல் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975-ம் ஆண்டு பிளஸ் 1 படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில், ஒன்று கூடிய மாணவிகள் தங்களின் பள்ளிப் பருவம், திருமண நிகழ்வுகள், குடும்ப வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை உள்ளிட்டவை தொடர்பான தங்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலர் தங்கள் தோழிகளைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இப்பள்ளியில் படித்த பலர் தற்போது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களும் சந்திப்பு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT