ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே பண்டிதன்பட்டியை சேர்ந்தவர் கருப்பாயம்மாள்(101). இவரது கணவர் தலமலையான். இவர்களுக்கு கடந்த 1938-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 14 குழந்தைகள் பிறந்தனர்.
இவர்களில் தற்போது 3 மகன்கள், 3 மகள்கள் உயிருடன் உள்ளனர். தலமலையான் 1984-ம் ஆண்டில் உயிரிழந்து விட்டார். கருப்பாயம்மாள் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், எள்ளுப்பேரன்கள், எள்ளுப் பேத்திகள் என 50-க்கும் அதிகமான உறவுகளுடன் 4 தலை முறைகளை கடந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கருப்பாயம் மாளின் 101-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவர் களது வாரிசுகள் முடிவு செய் தனர். நேற்று உறவினர்கள் அனைவரையும் அழைத்து, பண்டிதன்பட்டியில் கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பாக கொண்டாடினர். கருப்பாயம்மாள் கூறுகையில், பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இக்காலத்து இளைய தலைமுறையினர் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.