வாழ்வியல்

மனிதர்களை போலவே ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்து பார்த்த குரங்குகள்: மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ

செய்திப்பிரிவு

சென்னை: இன்றைய டிஜிட்டல் சூழ் சமூக வலைதள உலகில் கையில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஒவ்வொருவரும் அதை கொண்டு அன்றாடம் சில நிமிடங்களாவது இணையவெளியில் உலவுவது வழக்கம். இந்தச் சூழலில் சேட்டை செயல்களை கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் செய்யும் குரங்குகள் சில ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்து பார்த்துள்ளன. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளார்.

இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஹிட் ஆகிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் இப்போது இந்த வீடியோவும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 30 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குரங்குகள் சில ஸ்மார்ட்போன் ஒன்றை ஸ்க்ரோல் செய்து பார்க்கின்றன. மனிதர்களின் செயல்பாடுகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்யும் பிராணிகளில் குரங்குகளும் ஒன்று. இப்போது டிஜிட்டல் காலத்தில் வாழும் மனிதர்கள் எப்படி ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்களோ அது போலவே குரங்குகளின் செயல்களும் உள்ளது. இந்த வீடியோவை பல லட்ச கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.

“டிஜிட்டல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நம்ப முடியாத நிலையை எட்டி உள்ளதை பாருங்கள்” என கிரண் ரிஜிஜு அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பிரிவில் பதிவு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT