பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய்த்திட்டில் பாரம்பரிய விளை யாட்டான கிட்டி புல் விளையாட்டு போட்டி நடந்தது. படம்: எம்.சாம்ராஜ். 
வாழ்வியல்

புதுவையில் பாரம்பரிய கிட்டி புல் விளையாட்டு போட்டி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான கிட்டி புல் விளையாட்டு போட்டி தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடக்கும் இப்போட்டியில் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் இருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர். தலா 11 பேர் அடங்கிய 6 அணிகள் இதில் விளையாடுகின்றன.

இறுதி போட்டி இன்று நடக்கிறது இதில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு மாலை பாண்டி மெரினா கடற்கரையில் பரிசளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரகாஷ் குமார் எம்எல்ஏ, பாஜக நிர்வாகிகள் சாம்ராஜ், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT