திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா. 
வாழ்வியல்

ரஞ்சிதமே... ரஞ்சிதமே... - திருப்பூர் போலீஸார் பொங்கல் விழாவில் சுவாரசியம்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி திருப்பூர் மாநகரில் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு, காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையா தலைமை வகித்தார்.

முன்னதாக காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை மற்றும் சேலையில் வந்திருந்தனர். காவல் நிலையத்துக்கு வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர். மண் பானையில் பொங்கல் பொங்கி வந்தபோது, குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் வெளியான 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே.. மனச களைக்கும் மந்திரமே...' பாடலுக்கு காவல் ஆய்வாளர் பிச்சையா உள்ளிட்ட போலீஸார் உற்சாக நடனம் ஆடினர். இதனை பார்த்த சக காவலர்கள் அவரது நடன அசைவை போற்றும் வகையில் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT