வாழ்வியல்

மதுரையில் களைகட்டிய குடில், ஸ்டார் விற்பனை: இயேசு பிறப்பை வரவேற்க தயாராகும் கிறிஸ்தவர்கள்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் கிறிஸ்தவர்கள் வீடு களிலும், தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை டிச. 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல் நாள் இரவே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை, திருப்பலிகள் நடக்கும். கிறிஸ்துவர்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்தோடு இதில் பங்கேற்பர். ஏழைகளுக்கு விருந்து வைத்து மகிழ்வர்.

கிறிஸ்துவர் வீடுகளில் ஸ்டார்கள், குடில்கள் அமைப்பர். இதையொட்டி, கடை வீதிகளில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட் கள், புத்தாடைகள் விற்பனை களைகட்டுகிறது.

மாசி வீதிகள், அண்ணாநகர், கே.கே.நகர், பைபாஸ் சாலை, பிபி. குளம், ஜவுளிக் கடைகள், பேன்சி ஸ்டோர்களில் கிறிஸ்தவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு விதவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ஸ்டார் அதன் தரத்தை பொருத்து ரூ.100 முதல் ரூ.500 வரை விற்கிறது. அதுபோல், அழகான குடில்கள், சிலைகளை வாங்க ஆர்வம் காட்டி வரு கின்றனர்.

பல்வேறு ஜவுளி நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வாங்கும் கிறிஸ்துவர் வீடுகளில் சிறந்த குடில்களை புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பினால் அதற்கு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளன. தற்போது கேரல் ரவுண்ட் நடந்து வருகிறது.

இரவு நேரங்களில் கிறிஸ்தவர் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வுடன் சென்று பாடல் பாடி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகளை வழங்கி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாட் களில் தேவாலயங்களில் பல் வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு கள் வழங்கப்படும். இதை யொட்டி தேவாலயங்கள் மின் விளக்குகளால் தற்போதே அலங் கரிக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT