மேலப்பாளையத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் எண்ணெய் பந்துகளை சுகாதாரப் பணியாளர்கள் வீசினர். 
வாழ்வியல்

மழைநீரில் உருவாகும் கொசு முட்டைகளை அழிக்க ‘எண்ணெய் பந்து’

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதிகளில் மழை நீரில் உருவாகும் கொசு முட்டைகளை அழிக்கும் வகையில் எண்ணெய் பந்துகளை தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீசினர்.

திருநெல்வேலியில் மாநக ராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் ஆலோசனையின்படி தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரில் உருவாகும் கொசு உற்பத்தியை தடுக்க, ‘ஆயில் பால்’ எனப்படும் எண்ணெய் பந்துகளை தேங்கியுள்ள தண்ணீரில் போடும் புதிய முறை கையாளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மேலப்பாளையம் பகுதியில் உதவி ஆணையாளர் ஜகாங்கீர் பாட்ஷா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஆகியோரின் முன்னிலையில் மழைநீர் தேங்கும் இடங்களில் எண்ணெய் பந்துகளை சுகாதார பணியாளர்கள் வீசினர்.

SCROLL FOR NEXT