வாழ்வியல்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் ‘கலைத் திருவிழா’ அசத்தல்கள் - இணையத்தில் வைரல்!

செய்திப்பிரிவு

சென்னை: வெறும் பாடங்கள் மட்டுமே கற்பிக்கு நிலையங்களாக மட்டுமே பள்ளிக் கூடங்கள் இருக்கக் கூடாது என்ற உளவியல் அணுகுமுறையில் மாணவர்களிடம் கலை திறன்களை வளர்க்கும் கலைத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘கலைத் திருவிழா’ தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கலை திருவிழாவில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு, மொழித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில், 196 இனங்களில் கலைத் திருவிழா போட்டி நடைபெறுகிறது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கவின் கலை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் என ஆறு வகை போட்டிகள் 36 இனங்களில் நடைபெறுகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுண் கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை - தோல் கருவிகள், துளை கருவிகள், நந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கலைத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் வீடியோவை தமிழக பள்ளிக் கல்வித் துறை தமது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றது. அவற்றில் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றி சில வீடியோக்கள் இப்பதிவில்....

மாணவியின் ஆர்ப்பரிக்கும் நடனம்....

மாணவரின் பாட்டு திறன்...

மாணவியின் பிரமிக்க வைக்கும் ஆங்கிலப் புலமை:

ஆடல் திறமைகளை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்:

காண்போரை ஆட வைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் இசை:

SCROLL FOR NEXT