வாழ்வியல்

ஆரோக்கிய வாழ்வுக்கு அம்சவள்ளியின் பத்து ஆசனங்கள்

வா.ரவிக்குமார்

இணையவழியில் யோகாசனப் பயிற்சிகளை வழங்கிவருபவர் சென்னையைச் சேர்ந்த யோகாசனக் கலைஞர் அம்சவள்ளி. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பத்து ஆசனங்களையும் அவற்றின் பலன்களையும் சுருக்கமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.


1. வஜ்ராசனம்


இந்த ஆசனத்தைச் செய்வதால் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூலம், குடலிறக்கம், குடல்புண், மாதவிடாய் கோளாறுகள் சரியாவதற்கு இந்த வஜ்ராசனம் செய்வதால் பலன் கிடைக்கும்.


2. பத்த கோணாசனம்


வயிறு, இடுப்புக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், சிறுநீரகம், புராஸ்டேட் சுரப்பிகள், கர்ப்பப்பை இயக்கம் சீராகும். சிறுநீர்த் தொற்று, குடலிறக்க பிரச்சினைகள் தீரும்.


3. அதோமுக ஆசனம்


இந்த ஆசனம் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நன்கு நீட்டப்படுவதால், முதுகுத்தண்டு உறுதியாகும். சுவாசக் கோளாறுகள் சரியாகும்.


4. பாதஹஸ்தாசனா


வயிற்றுப் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைப்பதால், செரிமானம் நன்கு நடக்கும். கல்லீரல், மண்ணீரல் இயக்கம் சீராகும். வயிறு உப்புசம், வாயுக் கோளாறுகள் சரியாகும்.


5. அர்த்த மச்சேந்திராசனா


முதுகுத்தண்டு திருப்பப்படுவதால், அதன் நெகிழ்வுத்தன்மை, உறுதித்தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.


6. பச்சிமோத்தாசனா


இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகள் முழுமையாக நீட்டப்படுவதால், உடலில் தேவையற்ற இறுக்கங்கள் நீங்கி, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.


7. புஜங்காசனா


இந்த ஆசனத்தில் ஈடுபடும்போது ஆழ்ந்த சுவாசம் கிடைக்கிறது. ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற சதைகளைக் குறைப்பதற்கு இந்த ஆசனம் பயன்படும் செரிமானக் கோளாறுகள் சரியாகும்.


8. ஏகபாத ஆசனா


கால் தசைகள் வலுவடைகின்றன. மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல், விழிப்புணர்வு, உடலின் சமநிலை பேணப்படுகிறது.


9. திரிகோணாசனா


வயிறு, இடுப்பு பகுதிகள் உறுதியாகின்றன. முதுகுப் பகுதியில் விறைப்புத் தன்மை மறைந்து நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. உடலின் சமநிலை அதிகரிக்கிறது. இடுப்புச் சதை குறைகிறது.


10. சர்வாங்காசனா


ஆசனங்களின் ராணி எனப்படும் ஆசனம் இது. இந்த ஆசனத்தைச் செய்வதால், மலச்சிக்கல் சரியாகிறது. செரிமானம் நன்கு நடைபெறுகிறது. முதுகுத்தண்டு வலுவடைவதால், முதுகு வலி நீங்குகிறது. தைராய்டு, பாரா தைராய்டு, இனப்பெருக்க சுரப்பிகளின் இயக்கம் சீராகிறது.

SCROLL FOR NEXT