இணையதளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். இவ்வாறு இணையதளங்களுக்கும், ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான 100-க்கும் மேற்பட்டவர்களை, அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இணையதள சார்பு நிலை மீட்பு மைய மருத்துவர்கள்.
இதுபோன்று இணையதளங்களுக்கு அடிமையாகமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? - இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்கிறார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி.
ஒருவர் இணையதளத்திற்கு அடிமையாக தொடங்கிவிட்டார் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளவது?
இணையதளம் மற்றும் இணைதள விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள் அதிக நேரம் இணையதளத்தில் இருப்பார்கள். இரவில் அதிக நேரம் கண் விழித்து இணையத்தை பயன்படுத்துவார்கள். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய இணையதளத்தில் விளையாடி கொண்டு இருப்பார்கள்.
இணையத்தில் இருந்து அவர்களை பிரித்துவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. சிலருக்கு மொபைல் போனை பயன்படுத்து போன்று கை மற்றும் விரல்கள் ஆடிக் கொண்டே இருக்கும். அதிக கோபம் வரும். யாரிடம் பேசாமல் ஒதுங்கி இருப்பார்கள். தூக்கிமின்மை அதிமாக இருக்கும்.
அதிக நேரம் இணையம் மற்றும் மொபைல் பயன்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்?
இணையம் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்தலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே கணினி மற்றும் இணையதளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கலாம். பெற்றோர்கள் மற்றும் உடன் உள்ளவர்கள் இந்த நேரத்தை முடிவு செய்ய வேண்டும். அனுமதி அளிக்கும் குறிப்பிட்ட நேரத்திலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளலாமல் அரவணைப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் நேரத்தை வைத்து ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கூற முடியுமா?
மொபைல் மற்றும் கணிணியில் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை விட என்ன பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சிலர் பணி நிமித்தமாக பல மணி நேரம் இணையதத்தில் இருக்க வேண்டி வரும். தொடர்ந்து 2 மணி நேரம் யாராவது இணையம் அல்லது செல்போனை பயன்படுத்தினால் அவர்கள் எதை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை பொறுத்துதான் எதற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இணையதளங்களுக்கு அடிமை ஆனவர்கள் எந்த மாதிரியான சிக்கை வழங்கப்படுகிறது?
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இணையதள சார்பு நிலை மீட்பு மையத்தில் முதல் கட்டமாக எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டயறிப்படுகிறது. இதனைப் பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சைக்கோ தெரபி, குரூப் தெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தூக்கமின்மை, மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு மருத்துகள் அளிக்கப்படுகிறது. தொடர் சிகிகிச்சை அளித்தால் விரைவில் இதில் இருந்து மீண்டு வர முடியும்.
மீண்டு வர எத்தனை நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்?
எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பொறுத்துதான் இதை கூற முடியும். 2 முதல் 3 மாத காலத்தில் மீண்டர்வர்கள் எல்லாம் உள்ளார்கள். தேர்வுக்கு போக பயந்த ஒரு மாணவன் 3 மாதத்தில் அதில் இருந்து மீண்டு வந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளளார். சிகிச்சை காலத்தில் வீட்டில் உள்ளவர்களின் அரவனைப்பு மிகவும் அவசியம். வீட்டில் உள்ள அரவணைப்புடன் நடந்து கொண்டர்ல் 3 மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும்.
இணையத்திற்கு அடிமை ஆவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
விளையாட்டு பழக்கம் இல்லாத காரணத்தால் இந்தப் பிரச்சினை அதிக அளவு வருகிறது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். குழந்தைகள் வெளியில் விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காத காரணத்தால் இணையத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது. பள்ளி மற்றும் வீடுகளில் விளையாட்டு அவசியமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் முடிந்த வரை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.