வாழ்வியல்

சென்னையில் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா

நிஷா

ஆரோக்கியத்தின் அடித்தளமாக இருந்த உணவு இன்று, சுவையை மட்டும் பிரதானமாகக்கொண்ட ஒன்றாகச் சுருங்கிவிட்டது; அது ஆரோக்கியத்துக்கும் எமனாக மாறிவிட்டது. நவீன உணவு முறையின் காரணமாக அபாயகரமான அளவில் அதிகரித்துவரும் நோய்களும், உயிரிழப்புகளும் உணர்த்தும் சேதி இது. இந்தச் சூழலில், நவீன மோகத்திலிருந்து நம் உணவு முறையை மீட்டெடுக்கும் முயற்சிகளை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே, செம்புலமும், பிரபல சமையல் சுற்றுலா கலைஞர் ராகேஷ் ரகுநாதனும் இணைந்து சென்னையில் நடத்தும் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா. பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்கும் செம்புலம் (இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்) கடந்த 25 ஆண்டுகளாகத் தொய்வின்றி தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அதே போன்று, நம்மூர் பாரம்பரிய சமையல் முறைகளில் ராகேஷ் ரகுநாதன் கொண்டிருக்கும் ஆர்வம் அளப்பரியது. இவர்கள் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழா மே 13 முதல் மே 24 வரை நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள்:

1. கைவரி சம்பா
2. குழியடிச்சான்
3. ஜீரக சம்பா
4. காலாநமக்
5. அடுக்கு நெல்
6. அனந்தனூர் சன்னா
7. கருங்குறுவை
8. முல்லன் கைமா
9. சிவப்பு கௌனி
10. நவரா
11. தூயமல்லி
12. தங்க சம்பா

விழாவில் பரிமாறப்படும் உணவுகள்

தொடக்க உணவு (சைவம்)

  • கைவரி சம்பா வெண்பொங்கல், தக்காளி தொக்கு
  • குழியடிச்சான் எகிப்திய கோஷரி
  • ஜீரக சம்பா ரமலான் நோன்புக் கஞ்சி

தொடக்க உணவு (அசைவம்)

  • தயிர் வெங்காயத்துடன் கூடிய காலாநமக் பன்னூர் மட்டன் புலாவ்

பிரதான உணவு (சைவம்):

  • அனந்தனூர் சன்னா தேங்காய்ப் பால் சாதம்
  • கருங்குறுவை பிரஞ்சு ஆனியன் ரிசொட்டோ

பிரதான உணவு (அசைவம்):

  • முல்லன் கைமா கொங்குநாடு மட்டன் பிரியாணி
  • சிவப்பு கௌனி தாய்லாந்து சிவப்பு கோழி கேசரோல்
  • அடுக்குநெல்லில் சமைக்கப்பட்ட மத்தியதரைக்கடல் சாதம்

இனிப்புகள்

  • நவரா ரிஸ் ஓ லைட் (பிரெஞ்சு அரிசியும் பால் புட்டிங்) எஸ்பிரெசோ கேரமல்
  • தூயமல்லி மாம்பழ பிர்னி (இனிப்பு) பச்சடி
  • தங்கச் சம்பா அக்காரடிசில்

எளிதாகச் சமைப்பது எப்படி?

இந்த விழா நமக்கு நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளை அறிமுகப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அந்த நெல் வகைகளைக்கொண்டு, இந்தக் காலத்தில் பிரபலமாகத் திகழும் உணவு வகைகளை எப்படிச் சமைப்பது என்பதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதை எவ்வாறு எளிதாகச் சமைப்பது எப்படி என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது. இது இந்த நெல்வகைகளை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த உதவும்.

இடம்: வைல்ட் கார்டன் கஃபே, அமேதிஸ்ட், சென்னை
நேரம்: மே 13 – 24
தொடர்புக்கு: 044 45991633 / 34

SCROLL FOR NEXT