கோவை: ‘தி இந்து’ நாளிதழ் வழங்கும் ‘நம்ம ஊரு, நம்ம ருசி’ சீசன்-3 சமையல் போட்டியின் தொடக்கநிலைப் போட்டி கோவை ஜென்னீஸ் ரெசிடென்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சைவ, அசைவ உணவு வகைகளில் குறைந்தபட்சம் இரு உணவு வகைகளை சமைக்க வேண்டும். அதில், ஒன்று தமிழகத்தின் சமையல்கலையை பிரதிபலிப்பதாக இருப்பதோடு, ‘நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா’ உபயோகித்ததாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரபல சமையற்கலை நிபுணர் கே.தாமோதரன் (செஃப் தாமு) தலைமையில், சமையற் கலை நிபுணர்கள் ஜெகன் ராஜ்குமார், அருள்செல்வன் ஆகியோர் கொண்ட நடுவர் குழுவினர், போட்டியாளர்கள் சமைத்த உணவு வகைகளை தேர்வு செய்தனர்.
இதில், கோவை காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த ஜி.சசி (63) செய்த உளுந்தங் களி முதலிடத்தை பிடித்தது. கத்தரிக்காய் சம்பல், சேமியா இட்லி ஆகியவையும் நடுவர்களின் பாராட்டைப் பெற்றன. கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த மோகனா பாண்டியன் (32), காட்சிப்படுத்திய 28 வகை உணவுகள் கொண்ட ‘மாப்பிள்ளை விருந்து’ இரண்டாம் இடத்தை பிடித்தது. கேரட் தினை பாயாசம், சாமை ராகி களி, கைமா மக்ரோனி, ஆப்பிள் மக்ரோனி, சாஹி சிக்கன் லஜவாப் ஆகியவற்றை போத்தனூரைச் சேர்ந்த ஷபீனா யாஸ்மின் (40) காட்சிப்படுத்தியிருந்தார். அவை மூன்றாமிடம் பிடித்தன.
தொடக்கநிலை தேர்வுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து காட்சிப்படுத்திய பங்கேற்பாளர்களை நடுவர்கள் பாராட்டினர். இதன் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் உதவி மேலாண் அறங்காவலர் கௌரி ராமகிருஷ்ணன், விடியம் கிச்சன் அப்ளையன்ஸ் விநியோகஸ்தர் டி.சுப்ரமணியம், ஆர்கேஜி நெய் நிறுவனத்தைச் சேர்ந்த ஜி.அரவிந்த், எஸ்.சபரி, காளீஸ்வரி ரீபைனரி நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் ஆர்.கே.ராஜேஷ், சேவரிட் விநியோகஸ்தர் எம்.சுரேஷ், சேவரிட் நிறுவனத்தின் கேட்டகிரி ஹெட் ராதிகா ஜெகஜீவன்ராம், மதுரம் அரிசி நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் சி.சந்தோஷ், கண்ணன் ஜூப்ளி காபி நிறுவனத்தைச் சேர்ந்த சங்கர் கிருஷ்ணன், வேகூல் ஃபுட்ஸ் அண்ட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் பிரதீப் கங்காதரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த சமையல் போட்டியின் டைட்டில் ஸ்பான்ஸராக விடியம் அப்ளையன்சஸ் செயல்பட்டது. இந்த போட்டியை சேவரிட், மதுரம் அரிசி ஆகியவை இணைந்து வழங்கின. இதுதவிர, ஆர்கேஜி நெய், கார்டியா அட்வான்ஸ்டு நிலக்கடலை எண்ணெய், எல்ஜி கூட்டுப் பெருங்காயம், நாகா ஃபுட், ஐடிசி மங்கள்தீப், எவரெஸ்ட் மசாலா, கரூர் வைசியா வங்கி ஆகியவை இணைந்து வழங்கின. இதழ் பார்ட்னராக அவள் விகடனும், மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், சேனல் பார்ட்னராக கலைஞர் தொலைக்காட்சியும், செய்தி சேனல் பார்ட்னராக கலைஞர் செய்திகளும் இருந்தன. இந்த நிகழ்வின் நிகழ்விட பார்ட்னராக ஜென்னீஸ் ரெசிடென்சி இருந்தது.l