ஊட்டியில் நேற்று தொடங்கிய சாக்லேட் திருவிழாவில் இடம்பெற்ற, அறுசுவைகளுடன் தயாரிக்கப்பட்ட சாக்லேட் மலை. | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

 
வாழ்வியல்

ஊட்டி சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த 210 கிலோ ‘சாக்லெட் மலை’

செய்திப்பிரிவு

ஊட்டி: கிறிஸ்​து​மஸ், புத்​தாண்டை வரவேற்​கும் வகை​யில் ஊட்டியில் சாக்​லேட் திரு​விழா தொடங்​கியது. இதில் இடம்​பெற்ற சாக்​லேட்​டால் செய்​யப்​பட்ட நீல​கிரி மலை பார்​வை​யாளர்​களை வெகு​வாகக் கவர்ந்​தது.

நீல​கிரி​யில் பிரசித்தி பெற்ற ஊட்டி வர்க்​கி, யூகலிப்​டஸ் தைலம், தேயிலைத்​தூள் வரிசை​யில் சுற்​றுலாப் பயணி​கள் விரும்பி வாங்​கிச் செல்​வது ‘ஹோம் மேட் சாக்​லேட்’ ஆகும். இவற்​றைத் தயாரிப்​ப​தற்​குத் தேவை​யான இதமான காலநிலை நீல​கிரி​யில் நில​வு​கிறது.

தமிழகம், கேரள மாநிலங்​களில் சாகுபடி செய்​யப்​படும் கோகோ பழங்​களில் இருந்து சேகரிக்​கப்​படும் கோகோ விதைகளை அரைத்​து, அவற்​றுடன் கோகோ பட்​டர் மற்​றும் கரும்பு சர்க்​கரை சேர்த்து ஹோம் மேட் சாக்​லேட்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. இவற்றை சுற்​றுலாப் பயணி​கள் மட்​டுமின்​றி, உள்​ளூர் மக்​களும் விரும்பி வாங்​கிச் செல்​கின்​றனர்.

இந்​நிலை​யில், கிறிஸ்​து​மஸ் மற்​றும் புத்​தாண்டை வரவேற்​கும் வகை​யில் ஊட்டியில் எம் அன்ட் என் அருங்​காட்​சி​யகத்​தில் 15 நாள் சாக்​லேட் திரு​விழா நேற்று தொடங்​கியது.

இதுகுறித்து நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர்​கள் அப்​துல் ரகு​மான், பசலூர் ரகு​மான் ஆகியோர் கூறும்​போது, “இந்த ஆண்டு டார்க், மில்க், ஒயிட் என மூன்று ரகங்​களில் பாதாம், பிஸ்​தா, முந்​திரி, திராட்சை உள்​ளிட்ட பொருட்​களைக் கொண்டு தயாரிக்​கப்​பட்ட, 150 வகை​யான ஹோம் மேட் சாக்​லேட்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

இந்த ஆண்​டின் சிறப்​பம்​ச​மாக தேன், தேயிலை, மிளகு, காளான் உட்பட நீல​கிரி மாவட்​டத்​தில் கிடைக்​கக்​கூடிய பொருட்​களைக் கொண்டு இனிப்​பு, புளிப்​பு, உவர்ப்​பு, கசப்பு, கார்ப்​பு, துவர்ப்பு ஆகிய அறுசுவை​களில் தயாரிக்​கப்​பட்ட சாக்​லேட் வகைகள் சுற்​றுலாப் பயணிகளை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளன.

மேலும், 210 கிலோ சாக்​லேட்​டைக் கொண்டு நீல​கிரி மலை போன்ற வடிவம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதை பார்​வை​யாளர்​கள் வெகு​வாக ரசித்​தனர். ரூ.60 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டுள்ள பல வகை​யான சாக்​லேட்​களை சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன் வாங்​கிச் செல்​கின்​றனர்” என்​றனர்.

SCROLL FOR NEXT