வாழ்வியல்

காதல் மொழி: ‘நாம்’ இருவர்!

கனி

நீங்களும் உங்கள் காதலரும் எப்படி உரையாடுகிறீர்கள் என்பது உங்கள் உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உரையாடும்போது எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் உறவுசார்ந்தது. நீங்கள் வைத்திருக்கும் எண்ண ஓட்டம், உங்கள் காதலரை எப்படி நடத்துகிறீர்கள், மனநிறைவு நிலை போன்றவற்றை அது பிரதிபலிக்கும். இந்தக் கருத்தை அண்மையில் நடைபெற்ற ஆய்வும் உறுதிசெய்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், ‘நான்’ என உரையாடும் காதலர்களைவிட ‘நாம்’ என உரையாடும் காதலர்கள் மகிழ்சியான உறவைப் பேணுவதாக அந்த ஆய்வுத் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 5,000 பேருடைய நடத்தை, மகிழ்ச்சி நிலை, உடல், மன ஆரோக்கியம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 

இந்த ஆய்வின் முடிவில், ‘நாம் பேசுவோம்’ என்று உங்கள் துணை  உங்களிடம் சொல்வதற்கும் மகிழ்ச்சியான உறவுக்கும் வலிமையான தொடர்பு இருப்பதாக ஆய்வுத் தெரிவிக்கிறது.

‘நாம்’ என்று பேசுவது காதல் உறவில், ஒருவரையொருவர்  சார்ந்திருப்பதையும் ஒருவொருக்கொருவர் ஆதரவாக இருப்பதையும் உறுதிபடுத்துகிறது. உங்கள் காதலர் பேசும்போது உங்களை உறவை மனத்தில் வைத்து பேசுகிறார் என்பதற்கும், தன் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் என்பதற்கும் ‘நாம்’ என்ற இந்த வார்த்தைதான் உதாரணம்.

இந்த ‘நாம்’ என்ற வார்த்தை, காதல் உறவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். காதலருடன் பேசும்போது ‘நான்’ என்று பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘நாம்’ என்று பயன்படுத்துவது உங்கள் காதலருக்குக் கூடுதல் ஈடுபாட்டை உங்கள் மீது உருவாக்கும்; உறவையும் இயல்பாக வலிமைப்படுத்தும். இந்த வார்த்தை உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT